வடுகப்பிராமணியம் என்பது தாய்மொழி எதையும் கொண்டிராமல் இருக்கும் இரு சமூகங்களான வடுகரும் பிராமணரும் தமிழர் போன்ற இண்டியப் பூர்விகக்குடிகளை அரசியல் பகடைக்காய்களாக வைத்து விளையாட உருவாக்கிய கருத்தியலாகும்.
இதன்படி இந்துத்துவாக் குழுக்களில் வடுகப் பிராமணரும் பிற வடுகக் குடிகளும் இருந்து கொண்டு தமிழர் போன்ற பூர்விகக் குடிகளின் அறிவு வளங்களை அனைத்தையும் தங்களது என்பர்.
அதற்கு ஏற்றவாறு அவர்களை எதிர்க்கிறேன் என்ற பெயரில் அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை என வழிமொழிந்து அதை பிராமண எதிர்ப்பு கருத்தியல் எனக் காட்டிக்கொண்டு செயல்படுவர் திராவிடக் கருத்தியலில் உள்ள வடுகர்.
எடுத்துக்காட்டுக்கு கீழுள்ளவற்றைக் கொள்ளலாம்.
1. தமிழகத்தில் சங்ககாலத்தின் போது பார்ப்பனர், அந்தணர், மறையர், கணியர். அறிவர் எனப்பட்டோர் அனைவரும் தற்காலத்தில் பட்டியல் சாதிகளாய் தமிழ்நாடு அரசு சாதிப் பட்டியலில் உள்ள பறையர், சாம்பவர், வள்ளுவர், திருவள்ளுவர், பாணர், கணியர், கூத்தர், புலையர், அய்யனார், சாணார் என அழைக்கப்படும் ஈழவர், நாடார் போன்றோரே ஆவர். இவர்களோடு ஒவ்வொரு நிலக்கிழமை சமூகத்துக்கும் தங்களுக்குள்ளேயே பார்பனர்களை உருவாக்கிக் கொள்ளும் வழிமுறை ஒன்று இருந்தது. அதையும் வடுக விஜயநகர நாயக்கர் காலத்தில் அழித்தொழித்து வடுகர் தம் வசப்படுத்திக்கொண்டனர்.
ஆனால் இந்த சங்ககால அறிவு சார்ந்த குடிகளின் பெயர்களை வடுகப்பிராமணியம் பின்வருமாறு தனது வயப்படுத்திக்கொண்டது.
ஆரியப் பார்ப்பான் சொல்வது
அகத்தியன் பிராமணர். தொல்காப்பியன் பிராமணர். கபிலர் பிராமணர். திருவள்ளுவர் பிராமணர். பிராமணரே தமிழர்களுக்கு அறிவு கொடுத்தோர். அவர்களுக்கு முன்னர் தமிழர்கள் காட்டுமிராண்டிகள்.
ஆரிய வடுகன் சொல்வது
அகத்தியன் தொல்காப்பியன் கபிலன், வள்ளுவன் போன்றோர் ஆரியர் ஆவர். அதனால் அவர்கள் எழுதிய இலக்கியங்கள் அனைத்தும் ஆரியருடையது. தமிழனுடைய நூல்கள் அனைத்தும் ஆரிய மலம் கலந்தது. தமிழர்கள் காட்டுமிராண்டிகள். அவர்களை பிராமணரிடம் இருந்து காப்பாற்றியது ராம்சாமி நாயுடுவே.
ஆட்டையைப் போட்டவை
இந்த இரண்டுப் பந்தாட்டங்களையும் நம்பினால் தமிழர்க்கு பின்வரும் இழப்புகள் வரும்.
1. மறையர் எனப்பட்டது சங்க இலக்கியங்களில் பறையர் ஆவர். ஆனால் இந்த சங்க இலக்கியச் சான்றுகளை பிராமணருடைமை ஆக்குவது மூலம் நான்மறை தமிழருடையது அல்ல என்றாகும்.
நான்மறையை ஆரியப் பார்ப்பான் தமிழருடையது அல்ல என்பதன் மூலம் மறுக்கிறான். அதை ஆரிய வடுகன் (திராவிடன்) அவனை எதிர்க்கிறேன் என்ற பெயரில் வழிமொழிந்து அதை ஆரிய மலம் எனச் சொல்வதன் மூலம் ஆரியருடையதாக ஆக்குகிறான்.
ஆக ஆரியப் பார்ப்பானும் சரி. ஆரிய வடுகனும் சரி. தமிழருக்கு மறைகளே கிடையாது எனக் காட்ட முயல்கின்றனர். ஆனால் தமிழர்களின் மறைகள் யாவை என இனி வரும் பதிவுகளில் விளக்கப்படும்.
2. ஆரியப் பார்ப்பான் சொல்வது
சிவன், முருகன், பார்வதி, திருமால், இந்திரன், வருணன் அனைவரும் ஆரியர். ஆரியருக்கு மட்டும் உரியக் கடவுள்கள்.
ஆரிய வடுகன் சொல்வது
திராவிடம் பேசுகிறேன் எனச் சொல்லி ராம்சாமி நாயுடுவின் பின்னால் நின்று கொண்டு சிவன், முருகன், பார்வதி, திருமால், இந்திரன், வருணன் அனைவரும் ஆரியர். ஆரியக் கடவுள்கள் என வழிமொழிகிறான் ஆரிய வடுகன். அதனால் தமிழர்கள் கட்டிய கோயில்கள் அனைத்தும் பிராமணரிடம் மறைமுகமாக ஒப்படைக்கிறான் வடுகன்.
ஆட்டையைப் போட்டவை
1. தமிழர்களின் குறிஞ்சி நில முன்னோரும் அரசருமான சேயோன் எனப்பட்ட மரபினரான சிவனும் முருகனும் இதனால் ஆரிய மயமாகின்றனர். ஆரியப் பார்ப்பான் தமிழர்களின் முன்னோரை மறைத்து அவர்களை தங்களின் கடவுள்கள் என்றான். அதை ஆரிய வடுகன் திராவிடம் என்ற பெயரில் வழிமொழிந்தான்.
2. தமிழர்களின் நெய்தல் நில முன்னோனும் அரசனுமான ஆன வாரணன் எனப்பட்ட கடலன் மரபினனான வருணனை இதனால் ஆரிய மயமாகின்றனர். ஆரியப் பார்ப்பான் தமிழர்களின் முன்னோரை மறைத்து அவர்களை தங்களின் கடவுள்கள் என்றான். அதை ஆரிய வடுகன் திராவிடம் என்ற பெயரில் வழிமொழிந்தான்.
3. தமிழர்களின் முல்லை நில முன்னோனும் அரசனுமான மாயோன் எனப்பட்ட ஆயர் மரபினனான கண்ணனை இதனால் ஆரிய மயமாகின்றனர். ஆரியப் பார்ப்பான் தமிழர்களின் முன்னோரை மறைத்து அவர்களை தங்களின் கடவுள்கள் என்றான். அதை ஆரிய வடுகன் திராவிடம் என்ற பெயரில் வழிமொழிந்தான்.
4. தமிழர்களின் மருத நில முன்னோனும் அரசனுமான வேந்தன் எனப்பட்ட இந்திரனை இதனால் ஆரிய மயமாகின்றனர். ஆரியப் பார்ப்பான் தமிழர்களின் முன்னோரை மறைத்து அவர்களை தங்களின் கடவுள்கள் என்றான். அதை ஆரிய வடுகன் திராவிடம் என்ற பெயரில் வழிமொழிந்தான்.
5. தமிழர்களில் உட்குழு மோதல் வழுத்ததன் மூலம் நடக்கும் சிறு போர்களில் தோற்பவர்களை பாலை நிலத்துக்கு விரட்டினர். அவர்களில் ஆண்கள் பெருமாப்லும் அழிக்கப்பட்டனர் என்பது இயல்பு நிலையாம். அதனால் அப்போது அவர்களுக்கு தற்காலிமாக பெண் தலைமை ஏற்பட்டது. அந்த பெண்ணரசிகளான கொற்றவை மரபினரை ஷக்தி அமசங்கள் எனச் சொல்லி அவர்களை தங்களின் கடவுள்கள் என்றான். அதை ஆரிய வடுகன் திராவிடம் என்ற பெயரில் வழிமொழிந்தான்.
இப்படி தமிழர் இழந்தது பலப்பலவாகும். ஆரியப் பார்ப்பான் தமிழரை நேரடியாக தாழ்த்துவதும் அதை எதிர்க்கிறேன் பேர்வழி என்று திராவிடத்தின் பெயரில் மறைந்து கொண்டு ஆரியப் பார்ப்பான் சொல்வது அனைத்தும் உண்மை அதை தமிழர் தங்களுடையது எனக்கூடாது எனச் சொல்லி அதை ஆரியப் பார்ப்பானிடம் புடுங்கிக்கொடுக்கிறான் ஆரிய வடுகன்.
இந்த கருத்தால் தமிழரிடம் இருந்து ஆரிய வடுகனால் ஆரியப் பார்பானுக்கு புடுங்கிக்கொடுக்கப்பட்டவையை மீட்கும் கருத்தியலை வலுப்பெறச் செய்வதே இத்தளத்தின் நோக்கம் ஆகும்.
இந்த வடுகப்பிராமணியம் என்ற சொல்லை முதன்முதலில் தன் நூல்களில் பயன்படுத்தியது மூலம் தமிழ்த்தேசியதுக்கு மிக முக்கியமான பாதுகாப்பை செய்தார் வெங்காலூர் குணா.
குணா உருவாக்கிய சொற்களிலேயே தமிழ் விரோதப் போக்குள்ள அனைவரின் முகமூடியையும் உடைக்கும் மிகவும் நுணுக்கமும் அரசியலும் வாய்ந்த வீரியத் தன்மையுடைய மிகவும் பலம் வாய்ந்த அரசியல் சொல்.
வடுகப்பிராமணியம்.
இந்த வடுகப்பிராமணியம் என்ற சொல் உச்சரிக்கப்பட்டு தமிழர் அதை எதிர்க்கும் போதெல்லாம் பிராமணக் கொட்டமும் அடங்கும். வடுகக்கொட்டமும் அடங்கும். இந்த சொல் உள்ள முகநூல் பதிவுகளை திராவிடத்தை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்யும் பிராமணனும் பகிரமாட்டான். ஆரியத்தை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்யும் வடுகனும் பகிர மாட்டான்.
இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ள ஆரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை வடுகர் திராவிடம் என்ற பெயரிலோ
இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ள திராவிட எதிர்ப்பு நடவடிக்கைகளை பிராமணர் இந்தியம் என்ற பெயரிலோ
ஆட்டையைப் போடமுடியாது. இந்த சொல் அரசியல் தமிழர் அனைவருக்கும் தெரியனும்.
ஆரியம் என்பது வடுகனின் பிராமண வடிவம்.
திராவிடம் என்பது பிராமணின் வடுக வடிவம்.
இந்துத்துவம் என்பது தமிழரை பிராமணரின் கீழ் கொண்டு வர உருவாக்கப்பட்ட கருத்தியல் வடிவம்.
திராவிடம் என்பது தமிழருக்கு வரலாறில்லாமல் செய்து பிராமணரிடம் பிச்சை எடுக்க வைக்கத் துடிக்கும் கருத்தியல் வடிவம்.
இனிவரும் பதிவுகள் அனைத்தும் திராவிடத்தின் பெயரில் ஆரிய வடுகன், இந்துத்துவம் பெயரில் இருக்கும் ஆரியப் பார்ப்பானிடம் அள்ளிக் கொடுத்த தமிழரின் வரலாற்று எச்சங்கள் எவை எனச் சுட்டிக்காட்டும். அதற்கான ஆய்வுகளைச் செய்யத் தூண்டும்.